Aadhivasi Naane

ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

தேவதை உன்னை மீட்க்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை
சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே

ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

கலங்காதே பெண்ணே
உன் கண் பார்வை நானே
கடுங்காவல் மீறி
உன்னை கைசேருவேனே

எனக்கென நீ உண்டு
இதயத்தில் பயமில்லை
நெருப்பினில் நின்றாலும்
எனக்கு அது சுடவில்லை

எனது விழி இரண்டில்
விளக்கு திரி எரியும்
உனது பாதைகளில்
உனக்கு வழி தெரியும்
ஜென்மம் மரணம்
எல்லாம் உன்னாலே

ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

நீ இல்லையென்றால்
என் வாழ்வே தனிமை
மரணத்தை விடவும்
அந்த நொடிதானே கொடுமை

உதிரமே மையாக
சதைகளே ஏடாக
கடிதங்கள் செதுக்கிடுவேன்
நரம்புகள் உளியாக

நான்கு யுகங்கள்
இந்த பூமி வாழ்கிறது
அதையும் தாண்டி
நம் காதல் வாழுமே
கூடும் உயிரும்
உன்னை தேடுதே

ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

தேவதை உன்னை மீட்க்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை
சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே

ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link