Ketkalaiyo

ஹோ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே

கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
என்னை விட்டு எங்கேப் போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டு எங்கும் போகாது

கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
என்னை விட்டு எங்கேப் போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டு எங்கும் போகாது

யமுனைக் கரையில் வந்து வந்து மோதும்
அலைப் போல் நினைவு நெஞ்சில் வந்துப் போகும்
அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே
நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே
வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும்
நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்

உன்னைப் பார்க்காது
கரம் சேர்க்காது
தவிக்கும் தவிப்பை
யாரைக் கண்டு நானும் சொல்வேன்?

கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
என்னை விட்டு எங்கேப் போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டு எங்கும் போகாது

உஉஉ... ஆஆஆ
ஆஆஆ... ஆஆஆ

முள்ளிலே மெத்தை இட்டு
தூங்கும் படி சொன்னாய்
எவரால் முடியும்?
நீயும் சொல்லு கண்ணா

கண்ணனின் கண்கள் விடும்
பாணம் ஒரு போதும்
காமனின் பாணம் போல்
உன்னை வருத்தாது

கொல்லுதே தனிமை
என்னை இந்த நாளில்
கொட்டுதே நெருப்பை
கோதை எந்தன் சேலை

மழைப் பெய்தாலும்
குளிர் அடித்தாலும்
அனல் போல் கொதிக்கும்
ஆசை கொண்ட தேகம் ரெண்டும்

கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
என்னை விட்டு எங்கேப் போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டு எங்கும் போகாது

கேட்கலையோ கேட்கலையோ
கண்ணனது கானம்?



Credits
Writer(s): Ilaiyaraaja, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link