Konjam Thira

கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே
உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன
என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும்
மறைந்து கிடக்கும் மனதின் நிஜங்கள்
ரகசியம் அதிசயம் புதையலை அன்பே எடுக்கட்டுமா

கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே
உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும்

உண்மையை சொல்லவா ஊமை போல் நடிக்கிறாய்
உதட்டிலே கசங்குதே காதல் பூவே
மௌனம் என்னும் சாவியால் வாயை நீ பூட்டினாய்
வாடினேன் தேடினேன் திறவு கோலே

பொய் வேடம் ஆஹா ஹாஹாஹா ஆஹாஹா
பொய் வேடம் ஆகாது மெய்யாகி போகாது
உன் வாயால் உண்மை நீ சொல்லு அதை நான் கேட்பேன்

கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே
உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன
என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும்

பௌர்ணமி கண்களால் பாரடி கண்மணி
வெளிச்சத்தை வேண்டுதே எனது உலகே
தென்றலின் வார்த்தையால் பேசடி பொன்மணி
மலர தான் துடிக்குதே இதய மலரே

மலர் மேனி ஆஹா ஹாஹாஹா ஆஹாஹா
மலர் மேனி காயங்கள் வந்தாலே மறைந்தோடும்
உள்ளத்தில் உள்ள காயங்கள் ஆறும் அன்பாலே

கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே
உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன
என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும்
மறைந்து கிடக்கும் மனதின் நிஜங்கள்
ரகசியம் அதிசயம் புதையலை அன்பே எடுக்கட்டுமா

கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே
உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன
என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும்



Credits
Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Palaniappan
Lyrics powered by www.musixmatch.com

Link