Naadodi Mannan

நாடோடி மன்னன்
நாம்போர பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ
ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேற எதும் தேவ இல்ல
தாலேலோ

பள்ளத்தில கால் இருந்தும்
பல்லக்குல்ல என் மவுசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு
பத்துதல ராவணனா
பாஞ்சு வரும் போர்முரசு
மெட்டெடுத்து பாடையிலே
நானும் கவி பேர்-அரசு

தொன்னையில சோறு
தொட்டியில நீரு
என்ன நடந்தாலும்
இல்ல இல்ல கண்ணீரு
நெத்தியில நூறு
நட்சத்திரம் பாரு
வந்தவழி போன
வம்பு இல்ல முன்னேறு

ஏ! சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு
எங்கே நின்னாலும்
அந்த இடம் ஏன் ஊரு

ஜாதி பாக்காத
சனமே என் கூட்டு
மோதி பாத்தாலயே
முடிப்பேன் பொலி போட்டு

கொஞ்சம் கெடச்சாலும்
பங்கு வைக்கும் ஆளே
கூட இருந்தாலே
எல்லா நாளும் நன்னாளே
குட்டு பட்ட ஏழை
கோட்டையில ஏற
எப்போதும் நாமே
நிப்போம் நிப்போம் முன்னாலே

பத்துதல ராவணனா

நாடோடி மன்னன்
நாம்போர பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ
ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேற எதும் தேவ இல்ல
தாலேலோ

பள்ளத்தில கால் இருந்தும்
பல்லக்குல்ல என் மவுசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு
பத்துதல ராவணனா
பாஞ்சு வரும் போர்முரசு
மெட்டெடுத்து பாடையிலே
நானும் கவி பேர்-அரசு

பத்துதல ராவணனா
பாஞ்சு வரும் போர்முரசு
மெட்டெடுத்து பாடையிலே



Credits
Writer(s): Yugabharathi, G. V. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link