Little India (From "Enemy")

கூட்டாளி வாலா முன்ன கச்சேரி போலாம் பின்ன
ஆத்தாடி நாலா பக்கம் நம்ம ஜனம் போடும் கும்மாளம்
கட்டடம் வானம் முட்ட கட்டுணோம் வேர்வை சொட்ட
பட்டணம் உண்டாக்கி தான் வச்சோம் இங்க எல்லோரும் வாழ

ஹே எப்பவோ வந்தோம் இங்க எத்தனை சொந்தம் அங்க
சுத்துர பூமிக்கு தான் சக்கரத்த செஞ்சோம் கையால
ஹே அக்கரை சீமையில நிக்கிற கப்பல் போல
எத்தனை துன்பம் தாண்டி வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க

ஏலா போவோம் வாலா
வா பங்காளி நீ சிங்கைகாரா
ஏலா போவோம் வாலா
நீ step'ah போடு செம்ம style'ah

கூட்டாளி வாலா முன்ன கச்சேரி போலாம் பின்ன
ஆத்தாடி நாலா பக்கம் நம்ம ஜனம் போடும் கும்மாளம்

Singapore'ரியன் வந்து scene'ahக நிற்கின்ற சூரியன்
இந்த சீமை கட்டிக்காத்த காளையன்
தங்க தேரோடும் வீதிக்கு வேரிவன் சொல்லிசை பாடுவேன்
மச்சான் நீ கேளு கேளு எங்கள் சிறப்பு
Singapore'u தமிழ் மக்கள் வளர்ப்பு ஒன்னா சேரும் போது பெரும் நெருப்பு

Looking modernity மச்சி கண்ணை கவர்ந்திட்டா தமிழச்சி
மண்ணின் சரித்திரம் தோண்டி பாரு மச்சி மின்னும் நட்சத்திரங்களின் ஊரு
பங்காளி மேல மேல ஏறு கொண்டாடு மேல தாளம் வச்சு ஆடு
என்னாளும் மறக்காது சொல்லி குடுத்த பண்பாடு

ரயிலோடும் பாதைக்கெல்லாம் வெயிலோடு உழைச்சோம்
குடியேறும் நாட்டுக்குத்தான் குரலாக ஒலிச்சோம்
உறவோட வாழும் இடம் அழகான உலகம்
வருங்காலம் மறக்காதே விளக்கேத்தி வணங்கும்

ஹே எப்பவோ வந்தோம் இங்க எத்தனை சொந்தம் அங்க
சுத்துர பூமிக்கு தான் சக்கரத்த செஞ்சோம் கையால
ஹே அக்கரை சீமையில நிக்கிற கப்பல் போல
எத்தனை துன்பம் தாண்டி வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க

ஏலா போவோம் வாலா
வா பங்காளி நீ சிங்கைகாரா
ஏலா போவோம் வாலா
நீ step'ah போடு செம்ம style'ah



Credits
Writer(s): Anantha Sriram, Thaman S
Lyrics powered by www.musixmatch.com

Link