Annamalai Annamalai (From "Annamalai")

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமல
எண்ணி ஏங்குறேன்

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமல
எண்ணி ஏங்குறேன்

ஆசையில சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும்
கண்ணா என் கொலுசு

அன்னக்கிளி அன்னக்கிளி
அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி

முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமல
எண்ணி ஏங்குறேன்

நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியிலே விழுந்த முடி நெஞ்சில் விழட்டுமே
ஈரத்தலை துவட்டும் துளி என் மேல் சிந்தட்டுமே
உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே

அழகான வீரனே அசகாய சூரனே
கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே
நாடகம் தொடங்கினால்
நான் உந்தன் தொண்டனே

அண்ணாமல அண்ணாமல ஹோய்
ஆசை வச்சேன் எண்ணாமலே ஹைய்யோ
அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன்

பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்
சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்
நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்

வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி
வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி
உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி

அன்னக்கிளி அன்னக்கிளி
அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி

முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

அண்ணாமல அண்ணாமல ஹா
ஆசை வச்சேன் எண்ணாமலே ஹோ ஓ ஓ
அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன் ச்சு ச்சு ச்சு

ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும்
கண்ணா என் கொலுசு

அன்னக்கிளி அன்னக்கிளி
அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி

அண்ணாமல அண்ணாமல
ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமல
எண்ணி ஏங்குறேன்



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link