Vaadai Vaadai Mazhaiyin (From "Gang Leader")

வாடை வாடை மழையின் வாடை
ஆடை ஆடை நனையும் ஆடை
விரக தாபத்தில் சிலிர்ப்பு வந்ததில்
மேனி நெளியுதே
ஏதோ ஏதோ ஏதோ தொல்லை

வாடை வாடை மழையின் வாடை
ஆடை ஆடை நனையும் ஆடை
விரக தாபத்தில் சிலிர்ப்பு வந்ததில்
மேனி நெளியுதே
ஏதோ ஏதோ ஏதோ தொல்லை

எத்தனை எத்தனை ஜென்மங்கள் பழகிய பந்தம்
பத்தினி சந்தனம் மன்னவன் மார்புக்கு சொந்தம்
ஹோய்-பாவையின் தேகத்தில் பிறந்தது தான் மகரந்தம்
படுக்கையில் இப்படி புகழ்வது தான் ஆனந்தம்
உனக்குள் நானுமாய் எனக்குள் நீயுமாய்
மழைக்கு ஒதுங்கலாம்
ஏதோ ஏதோ ஏதோ இன்பம்

வாடை வாடை மழையின் வாடை
ஆடை ஆடை நனையும் ஆடை

மேகத்து ஊஞ்சலில் வானத்தை தொடுகின்ற வேளை
நாணத்தில் இடம் விட்டு நழுவுது நழுவுது சேலை
பருவங்கள் குளிர்ந்திட பனிமழை பொழிகின்ற மாலை
இளமையின் ரகசியம் இழுக்குது இழுக்குது ஆளை
பார்வை தீயிலே பழகும் போதிலே பருவம் உருகுதே
ஏதோ ஏதோ ஏதோ தொல்லை

வாடை வாடை மழையின் வாடை
கோடை மேகம் கொட்டும் வேளை
விரக தாபத்தில் சிலிர்ப்பு வந்ததில்
மேனி நெளியுதே
ஏதோ ஏதோ ஏதோ தொல்லை

வாடை வாடை மழையின் வாடை
ஆடை ஆடை நனையும் ஆடை
விரக தாபத்தில் சிலிர்ப்பு வந்ததில்
மேனி நெளியுதே
ஏதோ ஏதோ ஏதோ தொல்லை

லாலா-லாலா-லாலா-லாலா (ஆ-ஆ)
லாலா-லாலா-லாலா-லாலா (ஓ-ஓ)
லாலா-லாலா-லாலா-லாலா
ஹான்-ஹான்-ஹான்-ஹான்-ஹான்-ஹான்-ஹான்



Credits
Writer(s): Vairamuthu, Bhappi Lahiri
Lyrics powered by www.musixmatch.com

Link