Ninaivo Oru

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்
அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்

அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
வந்தேன் தரவந்தேன்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை

பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்

மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link