Vaazhumattum

ஹே-லல-லால்-லல-லால்-லல-லால்-லல
லால்-லல-லால்-லல-லா-லா
லல-லால்-லலல்-லா-லா

லல-லால்-லல-லால்-லல-லலா-லா
லல-லால்-லல-லால்-லல-லலா-லா

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
அட ஆடியில் செய்தவன் ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

காலம் நம்மை பார்த்து கண்ணடித்தால் பதவி வரும்
அதுவே மெதுவாக ஜாடை செய்தால் சிறையும் வரும்
பலிக்கும் வரையில் மகராஜா
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்
சுக்கிரனோ சூரியனோ சனிபகவான் தானோ

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

கண்ணன் கம்சனை கொல்வதற்கு பிறப்பெடுத்தான்
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு அவதரித்தான்
நமக்கும் இது தான் அவதாரம்-ஹ-ஹா
உன் பேரையும் என் பேரையும் ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

அண்ணன் தம்பிகளும் நம்மை வெல்வதில்லை
நம்மை தனித்தனியே எண்ணிக் கொள்வதில்லை
ஒரு தாய் வயிற்று மகனானோம்
சாலைகளே காலங்களே சொல்லுங்களே
இருவரிலே ஒருவரையே காணுங்களே

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
அட ஆடியில் செய்தவன் ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா

வாழுமட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா

லா-லலா-லா-லா
லா-லலா-லா-லா
லா-லலா-லா-லா
லா-லலா-லா-லா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kaviarasu Kannadasan
Lyrics powered by www.musixmatch.com

Link