Vaadi Vaadi

வாடி வாடி வாசப்பக்கம்
வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம்
காத்து கருப்பு பாக்கும்முன்னே
போலாமா... ஆஆன்...

சீ... மியா மியா ஆசத்தொரை
வாயில் படியும் எச்சில் தொட
ராவும் வந்தா உங்கள் தொல்ல
தாங்கலயே ... ஏஏ

வர வர நீயும் வம்பு பண்ணி போற
பம்பு செட்டில் பாயுந்தான் கேக்குதடி
செக்குமாடு போல என்ன சுத்தி வார

எங்கப்பு மீசைய பாத்தாக்கா பாத்தாக்கா பாத்தா
காலும் தள்ளாடி தள்ளாடி நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெடவெடக்கும்

காலும் தள்ளாடி தள்ளாடி நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெடவெடக்கும்

கூட பூவு விக்கும் புள்ள
கூவி விக்க ஆளும் இல்ல
கூட வந்தா என்ன தர சொல்லடி

கூறு கட்டி விக்கும் மச்சான்
கூறுகெட்டு நிக்கிறியே
சேலக்குள்ள கொடுக்கருவா பாத்துக்கோ

ஏய் துடிக்குது மீச
தவிக்கிறேன் பேச
காட்டுப்புலி வீரமே என்கிட்டதான்

அதுக்குள்ள காள
நாளும் சொன்னா பூக்கும்
அத்தமக உன்ன நான்
தொட்டாக்கா தொட்டாக்கா தொட்டா

கண்ணில் தன்னாலே தானாவே தீ புடிக்கும்
இவளை கேளு...
நெஞ்சில் நெனப்புந்தான் நெனப்புந்தான் ஊத்தெடுக்கும் அடியே

கண்ணில் தன்னாலே தானாவே தீ புடிக்கும்
இவளை கேளு...
நெஞ்சில் நெனப்புந்தான் நெனப்புந்தான் ஊத்தெடுக்கும்
தன தந்தான தன தந்தான தன தந்தான தன தந்தான...

வீச்சருவா மூக்கழகி
வெட்டிப்பேச்சு பல்லழகி
நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா

அழுக்கு trouser ஆளு நீதான்
உளுத்து போன மாவு நீ தான்
நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா

உன்ன நான் பார்த்து
உச்சந்தலை வேர்த்து
தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி

அடடட போயா
ஜொள்ளு விடும் வாயா
என்னோட கோபம் நீயும்
பார்த்தாலே பார்த்தாலே பார்த்தா

பச்சமரம் கூட பஞ்சாகி எரிஞ்சிடுமே
மக்குமச்சான்
வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே

பச்சமரம் கூட பஞ்சாகி எரிஞ்சிடுமே
மக்குமச்சான்
வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே



Credits
Writer(s): Yuvanshankar Raja, Eknath
Lyrics powered by www.musixmatch.com

Link