Sahaayane

ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்

ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசியின்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன

தவறி விழுந்த பொருள்போல்
எனை எடுத்தாயடா
தவணை முறையில் உனை நான்
சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னைக் கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து

ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
ஸஹாயனே ஸஹாயனே

கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல்போட
இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட

இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா
கள்ளப்பார்வை என்னைக் கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண

ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்

Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link