Mudhal Mazhai (From "Bheema")

மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா
ஹேய் ஹேய் ஹேய் லோ
மே... ஹி... ரோஹினோ
மே... ஹி... ரோஹினோ

முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்... ஓ. இதமாய் மிதந்ததே

முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும். ம். இதயமாய் மிதந்ததே... யே

மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா
ஹேய் ஹேய் ஹேய் லோ
மே... ஹி... ரோஹினோ
மே... ஹி... ரோஹினோ

கனவோடு தானடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னை படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்

எதுவும் புரியா புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையால்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்

முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்... ஹோய். இதமாய் மிதந்ததே

ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை... ஒ
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
இரவும் பகலும் ஒரு மயக்கம்

நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே

மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா
ஹேய் ஹேய் ஹேய் லோ
மே... ஹி... ரோஹினோ
மே... ஹி... ரோஹினோ



Credits
Writer(s): Na. Muthukumar, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link