Kuyilukku Ku Ku (From "Friends")

குயிலுக்கு யாரவது பாட்டு சொல்லிக் குடுப்பங்களா?
நானும் என் friendsசும் சேர்ந்தா
குயிலுக்கு பாட்டும் சொல்லிக்கொடுப்போம்
மயிலுக்கு ஆடவும் கத்துக்கொடுப்போம்
ஏய் சிரிக்கும் கடல் அல சில முத்து சிதறுது யே யேயே யே யே
விரிக்கும் வலையில மனசெல்லாம் விரியுது யே யேயே யே யே
சோத்துக்கு பாடுபடும் எழைக்கொன்னும் இல்ல இல்ல
சொகமே ஏற்படுத்த பாடினா தொல்ல இல்ல
கைகளைக் கொட்டிக் கொட்டி சுத்தி சுத்தி கும்மியடிப்போம் யே யேயே யே யே

குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
கடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
நீரை பிரித்தாலும் வேராகிப்போகாது
இன்பம் கரை மீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா

நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பில் ஏது தேய்பிறை
அன்புக்கொரு எல்லை இல்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா
வானில் திரண்ட மேகத்தில் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போனது நேற்றோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு

குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா

அச்சுவெல்லம் பச்சரிசி சோறு
அச்சுவெல்லம் பச்சரிசி சோறு
கருப்பஞ்சாறு தேன் கலந்து பாடு
கருப்பஞ்சாறு தேன் கலந்து பாடு
ஆடி வரும் அம்மனோட தேறு
அம்மனுக்கு படையல் ஒன்னு போடு
ஊர் செழிக்க ஒசந்து போகும் பேரு ஓ

இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணைத் தொட ரெக்கைக் கொடு குயிலே
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்புக் கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே
ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தலையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போனது நேற்றோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு

குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
கடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
நீரை பிரித்தாலும் வேராகிப்போகாது
இன்பம் கரை மீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா

Credits
Writer(s): Bharathi Palani
Lyrics powered by www.musixmatch.com

Link