Poongatril

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா?

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வெறும் கோயில் இங்கே ஏமா விளக்கேற்றினாய்
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்
விளையாத மண்ணில் ஏமா விதை தூவினாய்
வெயிற்கால கானல் நீரில் வலை வீசினாய்

அறியாமல் பிழை செய்தாய்
மணலாலே சிலை செய்தாய்
அடி பாரதி கண்ணம்மா
இது பாழ்பட்ட மண்ணம்மா

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்
வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்

இளம்பூவே வருந்தாதே
உலகம் தான் திருந்தாதே
அடி பாரதி கண்ணம்மா
நீ பாரத பெண்ணம்மா

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா?



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link