Kaanakarunguyile (From "Poonthotta Kaavalkaaran")

மாப்பிள்ளை நல்ல புள்ள
ஆமாமா... ஆமா... ஆமா...
மணப்பொண்ணு சின்ன புள்ள
ஆமாமா... ஆமா... ஆமா...
மனம்போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது
ஆமாமா... ஆமா... ஆமா...
கனவும் பலிச்சது கல்யாணம் முடிஞ்சது
ஆமாமா... ஆமா... ஆமா...
இனி தாந்த தந்தன தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
தாந்த தந்தன தாந்த தந்தன தாந்த தந்தன பாடு

அடி கான கருங்குயிலே கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு கைராசி பாக்க போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு போல மலராக தூவும்மம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மால போடும்மம்மா
அடி கான கருங்குயிலே கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு கைராசி பாக்க போறேன்

ஜாதி ஆண் ஜாதி இவ உன் பொஞ்சாதி
இனிமே வேரேதும் ஜாதியில்ல
பாதி உன் பாதி மானம் மருவாதி
நாலும் காப்பாத்தும் கன்னி புள்ள
சொன்னத கேளு மன்னவன் தோளு
இன்பத்த காட்டும் பாரு புள்ள
சிந்திச்சி பார்த்து சொந்தத்த சேர்த்து
பெத்துக்க வேணும் முத்துப் புள்ள
நீதானில்லாது நேரம் செல்லாது
சேர எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல
பசிக்கும் வேறேதோ ஏக்கத்துல
அடி பரிமாரு மச்சான பாத்து
பாய் போட்ட கூட்டுக்குள்ள

அடி கான கருங்குயிலே கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு கைராசி பாக்க போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு போல மலராக தூவும்மம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மால போடும்மம்மா

பாசம் அன்போடு பழகும் பண்போட
நாளும் நீயெந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனி உந்தன் கண்ணுக்குள்ள
சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசா கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்ன பொண்ணு
இனிமே ரெண்டல்ல இதயம் ஒன்னாச்சு
இரவும் பகலெல்லாம் இன்பம் உண்டு
நெனச்சா நெஞ்செல்லாம் நெறஞ்சு பொங்காதோ
நெதமும் சுகம்முண்டு சொர்கம் உண்டு
ஒரு எலப் போட்டு போடாத சோறு
எடுக்கும்... ம் நேரம் இன்று

அடி கான கருங்குயிலே கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு கைராசி பாக்க போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு போல மலராக தூவும்மம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மால போடும்மம்மா

அடி கான கருங்குயிலே கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு கைராசி பாக்க போறேன்

Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link