Australia

படியேறும் போது ஜாக்கிரதையாய் ஏறணும்
அது வாழ்க்கையாய் இருந்தாலும் சரி, bus'ah இருந்தாலும் சரி
ம்ம். Take care
ஏம்பா, படியில இருக்கவங்க கொஞ்சம் மேல வாப்பா
Hey! Pimples'கு என்னடி cream use பண்ற (முன்னால யாரு? ticket, ticket, ticket வாங்கும் போது சில்லறையா குடுங்கப்பா)
எல்லையம்மன் கோயிலுக்கு ஒரு ticket கொடு பா (தம்பி footboard அடிக்காதே)
Non-stop'ன்னு green board மாட்டிருந்துட்டு all stopings'லையும் நிறுத்துறான், ச்சீ...
கைய மேல தூக்கமா நிக்குறா, அக்குள் வேற நாற்றது, தம்பி கைய கீழ போட்றா
அரசியல் வாதியெல்லாம் நிக்க வச்சு சுடனும், கட்சியோட சுத்தமா இரு
ஐயோ இந்த பசங்க கலாட்டா தங்களை டி, எழவு கத்துறாங்கப்பா
ஆமா, நீ இப்படித்தான் சொல்லுவ, ஆனா ஒருத்தனை விடாம எல்லாரையும் டாவு அடிப்ப
தம்பி படிக்கட்டுல நிக்காத
Hello! என்ன அச்சு?
உன்னைத்தாண்டி கேக்குறேன், என்ன அச்சு?
Sometimes cinema'வும் நிஜ வாழ்க்கையும் ஒரே மாதிரி தான் இருக்கு ல?

Australia தேசம் வரை
புகழ் மணக்கும் அழகெனக்கு
ஓரங்குலம் குறையாமலே
உரித்து தந்தேன் அதை உனக்கு
அழகை திணிப்பவளே கர்வம் எதற்கு
அழகை ரசிப்பதுதான் சாபம் எனக்கு
கொண்டை ஆட்டும் கோழி குலுக்கி வந்தா போதும்
கோபக்காரச் சேவல் சொக்காது
கெண்டை மீன்கள் கூடி வலை விரித்த போதும்
கெட்டிக்காரக் கொக்கு சிக்காது

கன்னிக் கண்ணா நீ காதல் சொன்னால்
என் உச்சந்தலை வானில் முட்டப் பறப்பேன்
நட்சத்திரம் இட்டுத் தேநீர் குடிப்பேன்
ஓ! வெட்டிப் பெண்ணே என்னை விட்டு விட்டால்
என் சின்னச் சின்ன லட்சியங்கள் முடிப்பேன்
ஏழு ஜென்மத்துக்கும் நன்றியோடு இருப்பேன்
அதிர்ஷ்டமென்னும் தேவதையாள்
ஒரு முறைதான் உன்னைக் கடப்பாள்
அந்த நேரம் நீ தூங்கிவிட்டால்
ஒளவை மட்டும்தான் உன்னை மணப்பாள்
ஐஸ்வர்யா ராய் வந்தாலும்
ஒளவை என்ற தாய் வந்தாலும்
எனக்கொரு சலனமில்லை
கொண்டை ஆட்டும் கோழி குலுக்கி வந்தா போதும்
கோபக்காரச் சேவல் சொக்காது

Australia தேசம் வரை
புகழ் மணக்கும் அழகெனக்கு
ஓரங்குலம் குறையாமலே
உரித்து தந்தேன் அதை உனக்கு

Yes sir, yes sir, I am so missing you, yes sir
Yes sir, yes sir, உன் mistress ஆக்கிவிடு, yes sir
ஏய் உனக்கு ஒரு joke தெரியுமா?
நம்ப தேவி அவ love பன்றவரையே கல்யாணம் பண்ணிக்க போறாளாம்!
தேசம் விட்டு வேறு தேசம் கூட
என்னைப் பற்றிப் பேசும் fashion இருக்கு
Internet'ல் நூறு பக்கம் எனக்கு
தன்னைத்தானே அட மெச்சிக் கொள்ளும்
புது வியாதி இங்கே ரொம்ப பேர்க்கு இருக்கு
கிழக்குக்குத் தேவையில்லை விளக்கு
பழம் பழுத்து கூட்டில் விழுந்தும்
பசுங்கிளியே என்ன தயக்கம்
குவிந்திருக்கும் இளமை உன்னை
கூப்பிட்டுமா இந்த மயக்கம்
பூக்கள் வந்து கொட்டும் போதும்
மேகம் நீரைச் சொட்டும் போதும்
பாறைக் கொரு கிளர்ச்சியில்லை
கெண்டை மீன்கள் கூடி வலை விரித்த போதும்
கெட்டிக்காரக் கொக்கு சிக்காது
Australia தேசம் வரை
புகழ் மணக்கும் அழகெனக்கு
ஓரங்குலம் குறையாமலே
உரித்துத் தந்தேன் அதை உனக்கு
அழகை திணிப்பவளே கர்வம் எதற்கு
அழகை ரசிப்பதுதான் சாபம் எனக்கு
கொண்டை ஆட்டும் கோழி குலுக்கி வந்தா போதும்
கோபக்காரச் சேவல் சொக்காது
கெண்டை மீன்கள் கூடி வலை விரித்த போதும்
கெட்டிக்காரக் கொக்கு சிக்காது



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link