Merkey

ஒஓஓஓஓஓ...

மேற்க்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் ஒஓஓஓஓஓ...
மேற்க்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்

இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
ஒளிசாட்டை எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளாய் எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து ஒஓஓஓஓஓ

கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு
கல்லரைகள் அல்ல
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல ஒஓஓஓஓஓ

இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே
நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும்
முட்டுங்கள் திறக்கும் என்னும் புது bible கேட்கட்டும்

சின்ன சின்ன தீக்குசிகள் சேர்ப்போம்
தீ வளர்த்து பார்ப்போம்
விடியல் வரும் முன்னே இருல் எடுத்து கொள்வோம்

குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை மீறும் போது புழுவும் புலி ஆகும் ஒஓஓஓஓஓ

தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில் சிலந்த்யின் வலையா
முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம்
நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்

மேற்க்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்

இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
ஒளிசாட்டை எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளாய் எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து ஒஓஓஓஓஓ
அச்சம் இல்லை அச்சம் இல்லையே



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link