Dol Dol (From "Pokkiri")

டோலு, டோலு தான் அடிக்கிறான்
இரு தோளும், தோளும் தான் உரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்

முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை

அய்ல, அய்ல அடி ஆரியமாலா
அகன்ற விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா, ஒய்லா நீ சிலுமிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
கோலா, கோலா, கோலா, கோலா, கோலா, கோலா
Show you what, I shake it up there

சுட, சுட மழையை குளு, குளு வெயிலை முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை முதல் முறை பார்த்தேனே
இடிகளை உரசி புயல்களை அலசி நடந்தவன் நான்தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க முதல் முறை பயந்தேனே

நீ ஞனன நமன, யா ஆ
நான் யரல வளல, யா ஆ
நீ உடைந்து உருக, யா ஆ
நான் உணர்ந்து பருக
Show you what, I shake it up there

வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம் விரிந்தது குடை போலே
இருபது வருஷம் பறவையை போலே சுற்றி, சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து முழுவதும் தொலைந்தேனே

நீ எனக்குள் நுழைய, யா ஆ
நான் உனக்குள் வளைய, யா ஆ
நாம் நமக்குள் கரைய, யா ஆ
நம் உலகம் உறைய
Show you what, I shake it up there
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்

முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை

அய்ல, அய்ல அடி ஆரியமாலா
அகன்ற விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா, ஒய்லா நீ சிலுமிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
கோலா, கோலா, கோலா, கோலா, கோலா
Show you what, I shake it up there



Credits
Writer(s): Vairamuthu, Ar Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link