Kannipengal

கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பத்து பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்
அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகன்
பெண்ணின் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ
கல்வி இல்லா கண்னியரும் கடிதம் எழுத செய்கிறவன்
காதல் மறுத்த பெண் மனத்தில் கல்லை எறிந்து போகிறவன் எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன்

சுவரில் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு
உறவாடும் கனவை கண்டு உச்சு கொட்டும் உதடு
ரதி தேவி பேத்தி போல மனைவி தேடும் மனசு
எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு
சின்ன கண்கள் இடையே சிக்கி கொண்ட போதும்
அலைகள் முட்டும் பாறை போலே அசையாதுள்ள வீரன் எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்

முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை
முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி
அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி
இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன்
யாரோ அவன் பேரை கேளுங்கள்
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்

மதம் என்ன ஜாதி என்ன மறந்து போனோம் நாங்கள்
பல ஊரு பறவைக்கெல்லாம் இதுதான் வேடந்த்தாங்கள்
உணவொடு பசியை கூட பகிர்ந்து கொள்வோம் நாங்கள்
கிழமை தேதி பார்ப்பதும் இல்லை நகரும் எங்கள் நாட்கள்
எதுவும் இல்லை கையில் எல்லாம் உள்ளது நெஞ்சில்
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்
கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பெண்ணின் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன்



Credits
Writer(s): Uptal Biswas, Ramani Bharadwaj, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link