Kanchipattu Chellakatti (From "Rettai Jadai Vayasu")

காஞ்சிப்பட்டு சேலை கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா

சேலைதான் old ஆச்சு
சுடிதாரும் bore ஆச்சு
நித்தம் ஒரு jeans போட்டு
முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு
அவளை நான் ரசிப்பேன்

மாசத்துக்கு ரெண்டு தரம்
Beauty parlour கூட்டி போவேன்
ராத்திரியில் நைட்டியை போல்
நானேதான் இருப்பேன்

காஞ்சிப்பட்டு சேலை கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா

Scooter ஓட்ட சொல்லுவேன்
இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு
பின்னால் மெல்ல கிள்ளுவேன்

தூங்கிப்போன சம்மதம்
தோசை நானே ஊத்துவேன்
ஊருக்கேதும் போயிட்ட
உள்ளுக்குள்ளே ஏங்குவேன்

அவள் முகம் என் மகளுக்குமே
வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை initial'லாய்
இடும்படி நான் செய்திடுவேன்

அவள் தாவணி பருவத்து
Love letter அனைத்தையும்
இருவரும் படித்திடுவோம்...
எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட
இனிப்பென ருசித்திடுவோம்

வெங்காயத்தை வெட்டும் போதும்
கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே
நான் அதை வெறுத்திடுவேன்

காஞ்சிப்பட்டு சேலை கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா

அடடா எந்தன் மம்மிக்கும்
High tech நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும்
தோழி போலே பழகணும்

அழகா பொண்ணு போகையில்
அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகனும்
ஆனா என்ன ரசிக்கணும்

அவள் தலை தனில் பூ தைத்து
அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால்
Beer அடிப்பதை நிறுத்திடுவேன்

ஒரு நாளைக்கு மூணென முறை வைத்து
அவள் தரும் cigarette குடித்திடுவேன்
என் சில்மிஷ கணங்களில் சிதறிடும்
Jacket hook'னை தைத்திடுவேன்

கோபபட்டு திட்டிவிட்டு
கொல்லப்பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பார்த்து விட்டு
மெல்ல நான் அழுவேன்

காஞ்சிப்பட்டு சேலை கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா

சேலைதான் old ஆச்சு
சுடிதாரும் bore ஆச்சு
நித்தம் ஒரு jeans போட்டு
முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு
அவளை நான் ரசிப்பேன்



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link