Semmeena Vinmeena (From "Ananda Poonkaatrae")

செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா

கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா

வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா

செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

இருளைப் பின்னிய குழலோ
இருவிழிகள் நிலவின் நிழலோ
பொன் உதடுகளின் சிறுவரியில்
என் உயிரைப் புதைப்பாளோ

ரவிவர்மன் தூரிகை எழுத்தோ
இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ

பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ
சின்ன ஓவியச் சிற்றிடையோ அவள் சேலை கட்டிய சிறுபுயலோ
என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்
அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்

செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

அவளே என் துணையானால்
என் ஆவியை உடையாய் நெய்வேன்
அவள் மேனியில் உடையாய்த் தழுவி
பல மெல்லிய இடம் தொடுவேன்

மார்கழி மாதத்து இரவில்
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்

மோகம் தீர்க்கும் முதலிரவில்
ஒரு மேகமெத்தை நான் தருவேன்
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்

அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ
குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன்

செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா

வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா

செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link