Unnai ninaichi

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

கண்டிருந்தேன் நான் தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு தானும்
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தகமே

நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link