En Nenchil

என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே

வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசையும் இல்லை
பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா

என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே

விண்மீனும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்த வா வாய்ப்புள்ள போது
விண்மீனும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்த வா வாய்ப்புள்ள போது
அடி நெஞ்சு தள்ளாடியே
அலை பாயும் போது தலை சாய்வதேது?

என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே

நான் உன்னை பார்த்து பார்த்தே தேய்கிறேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
நான் உன்னை பார்த்து பார்த்தே தேய்கிறேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
முகில் என்னை துகில் கொள்ளவே உன் கையை நீ நீட்டினால்
நான் என்னதான் செய்வதோ ஓ ஓ ஓ

என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே

என் உள்ளம் வெறும் கோப்பைத்தான் தடுமாறும் கண்ணே
உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே
என் உள்ளம் வெறும் கோப்பைத்தான் தடுமாறும் கண்ணே
உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே
நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று உடையாமல் ஊற்று

என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே

வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை
பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா

என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே
என் நெஞ்சில் தூங்க வா நிலவே



Credits
Writer(s): R Vairamuthu, Utpal Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link