Idhayam Unnai Thedudhe

வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே

இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
நினைவும் உன்னை தேடுதே நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே

அடி பெண்ணே இறந்தாலும் உன் மடியில்
கண்மூடத்தானே ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால் அது போதும்
அப்போதே நானும் மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுவேன்

வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே

பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது ஓ...
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது ஓ...
இறைவா ஓர் வரம் கொடு ஓ... இவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழவிடு ஓ... தாயாகி தாலாட்டவே

எங்கே நீ சென்றாலும் என் கால்கள் எப்போதும்
உன் பின்னே தான் நடக்கும் ஓ...
ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல் தான் இருக்கும் ஓ...

வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே

இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
அடி பெண்ணே இறந்தாலும் உன் மடியில்
கண்மூடத்தானே ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால் அது போதும்
அப்போதே நானும் மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுவேன்



Credits
Writer(s): N Muthu Kumaran, Prakashkumar G. Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link