Maattram Ondrudhaan Maaraadhadhu (From "Kochadaiiyaan")

எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ

உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது(மாறு மாற்றம் ஒன்றுதான் மாறாதது)
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்
பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது
பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது

சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்

உடலா உயிரா பெயரா நீ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது

நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்
நண்பா எல்லாம் கொஞ்ச காலம்

உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்...

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

தக்க-திமி-தக்க-ஜூனு-'தக்க-ஜூனு-தா-தா -தா
தக்க-திமி-தக்க-ஜூனு-'தக்க-ஜூனு-தா-தா-தா
தக்க-திமி-தக்க-ஜூனு-'தக்க-ஜூனு-தா-தா -தா
தாக்கு-தக்க-ஜூனு-கு-தக்க-ஜூ னு
தக்கிட்ட-தக்கிட்ட-தின -தக்கிட்ட-தக்கிட்ட-தின-தக்கிட்ட-தக்கிட்ட-தின
தக்க-தின்ன-தா
தக்கிட்ட-தக்கிட்ட-தின-தக்கிட்ட-தக்கிட்ட-தின-தக்கிட்ட-தக்கிட்ட-தின
தக்க-தின்ன-தா
தின்ன-தின்-கு-ன-க-தின-க-தின-க-ன-க-தா-தக்கிட்ட-திம்-த-திம்-தா
தா-தக்கிட்ட-திம்-த-திம்-தா தா-தக்கிட்ட-திம்-த-திம்-தா
தாக்கிட்ட-தக்க-திம்-திம்-தா தரிக்கிட்ட-திக்க-திம்-திம் தா
தரிக்கிட்ட-திக்க-திம்-திம்-தா
தத்-தித்-தக்க ஜூனு-தா-தித்-தக்க ஜூனு-தா-தக்க ஜூனு-தா
ததிங்கிணக்க-தா -ததிங்கிணக்க-தா
ததிங்கிணக்க-தத்-தித்-தக்க ஜூனு-தா தித்-தக்க ஜூனு-தா-தக்க ஜூனு-தா
ததிங்கிணக்க-தா-ததிங்கிணக்க-தா
ததிங்கிணக்க-தத்-தித்-தக்க ஜூனு-தா தித்-தக்க ஜூனு-தா-தக்க ஜூனு-தா
ததிங்கிணக்க-தா-ததிங்கிணக்க-தா
ததிங்கிணக்க-தா



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link