Karma Veeran (From "Kochadaiiyaan")

ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது தனக்காக வாழாது
ஹே ஏலே கர்ம வீரனே கடமை வீரனே கர்ம வீரனே ஹோ...

தோல்விகளாலே துவண்டுவிடாதே
வெற்றிகளாலே வெறிகொள்ளாதே
கல்லடி படும் என்பதாலே
மரம் காய்க்காமல் போவதில்லை
மாலைகளை கண்டு மயங்காதே
மலைகளை கண்டு கலங்காதே
சொல்லடி படும் என்பதாலே
வெற்றி காணாமல் போவதில்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா நீ ஓடிக்கொண்டே நில்
நிம்மதி வாழ்வு வேண்டுமா நீ பாடிக்கொண்டே இரு
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும்

தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

கோழைகள் மண்ணில் காண் அது பெரிதல்ல பேறல்ல
வீரர்கள் மண்ணில் காண் அது வரலாறு வரலாறு ஆ...
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை

வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே
அந்த பொன்னை ஒருநாள் மண்ணாய் பார்ப்பவன்
கர்ம வீரனே கர்ம வீரனே
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது
தனக்காக வாழாது தனக்காக வாழாது



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link