Veera (Yarukkhum Nenje)

(வீரா)

ஏ யாருக்கும் யாருக்கும் நெஞ்சே அஞ்சாதே
கண்கள் துஞ்சாதே
வாழ்வை கெஞ்சாதே ஏ

(வீரா)

Yeah... யாருக்கும் யாருக்கும் நெஞ்சே அஞ்சாதே
கண்கள் துஞ்சாதே
வாழ்வை கெஞ்சாதே ஏ-ஏ-ஏ
துன்பத்தில் துன்பத்தில்
ஒரு துணை உண்டு
காக்கும் துணிவுண்டு
கை என்ற படை உண்டு

(வீரா)
(வீரா)
(வீரா)

ஓ... காடெங்கும் தீ மூளும் போது
மேகங்கள் நீரூற்றும் பாரு
துன்பம் வந்தால்
காற்றோடு வருவேனே பாரு
காப்பாற்றும் என் கைகள் நூறு
வான் மீது ஏறி மேகங்கள் கீறி
நீர்தாரை வாறி மண்ணின்
தாகங்கள் தீர்க்கட்டுமா
காலம் தாண்டி வாழ
நான் கடவுள் ஒன்றும் அல்ல
பாதி கடவுள் ஆகி நான்
தேசத்தை காக்கட்டுமா

யாருக்கும் யாருக்கும் நெஞ்சே அஞ்சாதே
கண்கள் துஞ்சாதே
வாழ்வை கெஞ்சாதே (வீரா)
ஏ யாருக்கும் யாருக்கும் நெஞ்சே அஞ்சாதே
கண்கள் துஞ்சாதே
வாழ்வை கெஞ்சாதே ஏ

(வீரா)

ஏ விடியாத இரவேதும் இல்லை
முடியாத செயல் ஏதும் இல்லை
ஓ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
வானத்தில் ஒரு கோடு இல்லை
ஞானத்தில் சிறு தோல்வி இல்லை
குடில் கொண்ட வீரம்
மனம் கொண்ட ஞானம்
பெரு வெற்றி காணும் என்றும்
எப்போதும் தப்பாதடா
அடங்காத காளை அரங்கேறும் நாளை
பழிவாங்கும் வேளை
யார் சொன்னாலும் கேளாதடா

யாருக்கும் யாருக்கும் நெஞ்சே அஞ்சாதே
கண்கள் துஞ்சாதே
வாழ்வை கெஞ்சாதே (வீரா)
துன்பத்தில் துன்பத்தில்
ஒரு துணை உண்டு
காக்கும் துணிவுண்டு
கை என்ற படை உண்டு (வீரா)

(வீரா)
(வீரா)



Credits
Writer(s): Vishal-shekhar, Bhuvana Chandra
Lyrics powered by www.musixmatch.com

Link