Othayilae (From "Endrendrum Punnagai")

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ

அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ

நமக்கென இருந்தோமே தினசரி பிறந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காட்டினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது

நானும் மறக்கிறேன் முடியலையே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா



Credits
Writer(s): J Harris Jayaraj, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link