Kongunattu Thendraluku (From "Vaanavarayan Vallavaraayan")

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரி பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளும்டா
வந்தார வாழவைக்கும் சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள பெத்தெடுத்த சொர்க்கம் இது

ஹேய் கொங்கு நாட்டு தென்றலுக்கும்
குமரி பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும் ஹோய்

பசுமை நிறைஞ்ச வயலு
ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு
மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி
சிதறி கிடக்கும் தங்க வெயிலு

மலையின் மடியில் சாய்ந்து
புரண்டு படுத்து கிடக்கும்
மரம் புடுங்கி கவுண்டன் ஊரில்
மைனருங்க ரெண்டு பேரு

ஆடுபுலி ரெண்டும் இங்கே
அண்ணன் தம்பியாய் இருக்கு
ஆனாலும் பாசத்துக்கு இவங்க தான் விதிவிலக்கு
அதுக்கும் ஓர் கதை இருக்கு கேளுங்கடா இவங்க கதைய தான்

வந்தார வாழவைக்கும் சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள பெத்தெடுத்த சொர்க்கம் இது

ஹேய் கொங்கு நாட்டு தென்றலுக்கும்
குமரி பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும் ஹோய்

உறவு நிறைஞ்ச குடும்பம்
உலகம் அதுல அடங்கும்
வீடு வாசல் வீதி எல்லாம்
பால போல பாசம் பொங்கும்

உயிர உடலு பிரிஞ்சா
வாழ்க்கை இல்லடா கோவிந்தா
அண்ணன் தம்பி ரெண்டு பேரும்
அப்படிதான் சேர்ந்து வாழ்ந்தா

அண்ணனுக்கு கன்னி ராசி
பொண்ணு மட்டும் கிடைக்கலடா
தம்பிக்கு தான் பொண்ணுங்கள
சுத்தமாக புடிக்கலடா
ஊருசனம் தூங்கலடா கேளுங்கடா
இவங்க கதைய தான்

ஹேய் கொங்கு நாட்டு தென்றலுக்கும்
குமரி பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளும்டா

வந்தாரை வாழவைக்கும் சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள பெத்தெடுத்த சொர்க்கம் இது ஹேய்



Credits
Writer(s): Snehan, Yuvan Shankar Raj
Lyrics powered by www.musixmatch.com

Link