Edhukku Machan

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலந்தோறும் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டய நான்
இன்னும் கட்டி முடிக்கல

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

பொழுதும் பொண்ண சுத்தி
திரிஞ்சா உன்ன பத்தி
உலகம் என்ன சொல்லும்
வேணாம் மச்சான் வேணாடா

பொதுவா பொண்ண பத்தி
தவறா சொல்லும் புத்தி
இருக்கு உங்கிட்ட
வாய மூடி போயேன்டா

மன்னாதி மன்னனெல்லாம்
மண்ணா போனான் பொண்ணாலே
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே

அம்மாவ விட்டுபுட்டா
ஒன்னும் இல்ல மண் மேல
சும்மா நீ ஒவர் சீனு போடாதே

பெண்ணை நாடாதே
பின்பு வாடாதே
என்று சித்தரும் சொல்லி வைத்தாரே

பெண்ணை நீங்காதே
பின்பு ஏங்காதே
கண்ணதாசன் சொன்னாரே
பெண்ணாலே ரோட்டில் நீ நிக்க போற பின்னாலே

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலந்தோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

தனனனா தனனா தனனா தன்னனனா
தனனனா தனனா தனனா தன்னனா
தன்னனனனா தன தன்னனனனா
தன்னனனா தன்னனனா தன்னனனா னனனனா...

முதலில் கண்ணசைப்பா
முடிவில் கையசைப்பா
இதுதான் காதல் இங்கே
வேணாம் மச்சான் வேணாடா

அழகா கை கொடுப்பா
அழுதா கண் தொடப்பா
அவளால் நானும் இங்கே
சூப்பர் மேனா ஆவேன்டா

லைலாவால் மஜ்னு இங்கே
பட்ட பாடு போதாதா
மச்சான் நீ காதல் சங்கை ஊதாதே

லைலாக்கள் இல்லையென்றால்
இந்த பூமி சுத்தாதே
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே

பல்ல காட்டாதே
பல்பு வாங்காதே
என்று சொல்லுறேன் கேளு மச்சானே

அன்பு ஒயாதே
குத்தம் ஆகாதே
சொல்லி காதல் செய்வேனே
பெண்ணாலே ஒப்பாரி வைக்க போற பின்னாலே

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலந்தோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டய நான்
இன்னும் கட்டி முடிக்கல



Credits
Writer(s): Yugabharathi, N.r. Raghunanthan
Lyrics powered by www.musixmatch.com

Link