Mukundha Mukundha (From "Dasavathaaram [Tamil]")

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

வெண்னை உண்ட வாயால் மண்னை உண்டவா
பெண்னை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

என்ன செய்ய நானும், தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவை தான்

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

ஜெய் ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்
சீதா ராம், ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்

நீயில்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீயறியா செய்தியில்லை எங்கள் கிருஷ்ண சுவாமி

பின்தொடர்ந்து அசுரரும் வந்தால், புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு, அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது?
அறியாதார் கதைப்போலே அஞ்ஞானம் ஏது?
அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்டு உருகுகிறாளே
இங்கே ஓர் கோதை

வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே

ஹே, முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

மச்சமாக நேரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்

வாமணன் போல் தோற்றம் கொண்டு, வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி, இரணியனைக் கொன்றாய்
ராவணன் தன் தலையை கொய்ய, ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்

இங்கு உன் அவதாரம்
ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே
உன் திருவடி பட்டால் திருமணமாகும்
ஏந்திழை ஏங்குகிறேனே

மயில்பீலி சுடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

உசுரோடு இருக்கான் நான் பெத்த பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வல்லே
வானத்திலிருந்து வந்து குதிப்பான்
சொன்னா கேளுங்கோ அசடுகளே
ஆரா வமுதா, அழகா வாடா
உடனே வாடா, வாடா
கோவிந்தா கோபாலா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா (முகுந்தா முகுந்தா)
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா



Credits
Writer(s): Himesh Vipin Reshammiya, Veturi
Lyrics powered by www.musixmatch.com

Link