Mella Mella Kalavu

மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே
கனவு விழிகளோடு பிறக்க...
உள்ள உள்ள வெள்ளை வெளியில்
வண்ணப் பூ விரிந்து திறக்க

பூவின் பேரைக் காற்று கேட்டுச் செல்ல
புன்னகை தான் என்று நானம் சொல்ல
ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல...
அந்த பூவை சோலையாய்
மாற்றும் மாயையை கற்றுக்கொள் என் மனமே

புன்னகை சின்ன புன்னகை
இந்த பூமி மாற்றிவிடுமே
புன்னகை சின்ன புன்னகை
அந்த வானை கையில் தருமே

நொடிகள் குடிக்கிற நிமிடம்
மகிழ்ச்சி குவிக்கும் கூடம்
அதை நீ அறியும் கணத்தின் விளிம்பில்
காலம் காலில் விழுந்துவிடும்

கண்ணில் கற்பனைகள் மூழட்டும்
யாவும் மண்ணில் வந்து வாழ வேண்டும்
கொஞ்சும் கொஞ்சும் காற்றிலே
கொஞ்சம் கொஞ்சமாய் ஊஞ்சலாடு மனமே

சிந்தனை உந்தன் சிந்தனை
அது வானவில்லை சமைக்கும்
சிந்தனை உந்தன் சிந்தனை
சில வாழ்க்கை மாற்றி அமைக்கும்



Credits
Writer(s): M. M. Keeravani, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link