Kadavul Thandha

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில்
இன்பங்கள் எங்கும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ...

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடை பெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம் இந்த பரவசம்
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது

கோடையில் இன்று இலை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்

முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு



Credits
Writer(s): Devi Sri Prasad, Bharathi Palani
Lyrics powered by www.musixmatch.com

Link