Oru Kili Oru Kili (From "Leelai") - Reprise

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

உனக்குள் நான் வாழும் விவரம்
நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

விழி அல்ல விரல் இது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது
உனக்கு தான் உரியது

இமைகளின் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்

காதல் தான்
எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும்
அந்த வானம் போல் விழாதது

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

உனக்குள் நான் வாழும் விவரம்
நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி



Credits
Writer(s): Kavignar Vaalee, Satish Chakravarthy
Lyrics powered by www.musixmatch.com

Link