Mudhal Murai

முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ?
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே

நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
எனை தாயை போல
தாங்க வேண்டும் மடியினிலே

முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ?
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

நீ அருகில் தூங்கும் நேரமே
வானிலையும் மாறி போகுதே
நீயும் நினைத்தால் வானவில்
வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே
என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்
உனக்கென வேண்டுமா
உயிரையும் தருகிறேன்

நான் உன் மூச்சில் வாழும் வரம் அது
எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே

முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ?
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் தினமே

சூரியன் உதிப்பதே
உன் முகம் கானவே
பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே

கரு மழை மேகம் யாவும்
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ

முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ?
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே



Credits
Writer(s): Lalitha Anandh, Premgi Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link