Anjal Petti

அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே கண்கள்

சிரிப்பதேன்என்
நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரெக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்என்
தோளுக்குமேலே தூரிகை தீண்டும் உணர்வு முளைப்பதேன்
இராட்டிணங்கள் மூளைக்குள்ளே சுற்றிச்சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் காலில் சுழலும் பரபரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரத்த ரத்தரா...

ஊஞ்சலாடும் மனமே உனக்கு என் நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையை வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகை பூவாய் மலருகின்றது
உள்ளத்துணையை வாசக்காற்று சலவைசெய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது
என்னை நானே ரசித்துக்கொள்ளும் நிலைமையானது
இது நித்தம் நிகழும் ஆனால் கூட புதுமையானது...



Credits
Writer(s): M C Sabesan, M C Murali Raj, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link