Uyire Uyire Ennodu

உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த
விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை
மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை
பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது
போனால் மலைமீது தீக்குளிப்பேன்

என் உயிர் போகும் போனாலும் துயரில்லை
பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும்
பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில்
கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று
உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என்
வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு
கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை
மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த
பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த
போது மறு கண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை பலதாண்டி வேராக
வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக
வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும்
தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு
கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன்
ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து
மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு
கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link