Onna Thaangave

ஒன்னத் தாங்கவே, நானும் வாழுறேன்
சாஞ்சனே தோல் சாஞ்சனே
ஒன்ன காணவே, கண்ண வாங்குனேன்
பூத்திறு நீ பூத்திறு

வரும் கண்ணீர் கூட இனி தேனாக்குவேன்
மறுத்தாயாக மாறி உன்ன தாலாட்டுவேன்
தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ

கடல் மேல துரும்பப்போல
ஆடிக் கெடந்தன்
அலையாக நீயும் வந்து
கரைய அடஞ்சன்

நடமாடும் செலையா வாழ்வன்
உன்ன அணச்சு
புது வாழ்க்க நீயும் அடைய
நானும் வருவேன்

கிளுகிளுப்ப கேட்டு
அடம் புடிக்கும் புள்ள
தோலாகி உன்ன கேட்டு
உள்ளம் அழுமே

கோயிலுக்குச் சென்று
கை கோர்க்கும் போது
உனக்காக மட்டும்தானே
வேண்டும் மனமே

உணவின்றி போனாக் கூட
உசுரு வாழுமே
ஓன் நினைவின்றி போனால் அன்றே
உசுரு போகுமே

ஒன்னத் தாங்கவே, நானும் வாழுறேன்
சாஞ்சனே தோல் சாஞ்சனே

காண்கின்ற கனவில் என்றும்
நீ சிரிச்சால்
காலங்கள் எல்லா நாளும்
தூங்கி கிடப்பேன்

விண்மீனின் நடுவே என்றும்
நீயும் திரிஞ்சா
வாழ்நாட்கள் எல்லா இரவில்
முழித்து கிடப்பேன்

தேய்வத்தின் ஜோதி
நீயாக ஆனால்
எரிகின்ற திறியாகதானே
நானும் இருப்பேன்

மீனாட்சி அம்மன்
நீயாக ஆனால்
உன் நெற்றி திலகம் என்றே
நானும் இருப்பேன்

உனக்கான இரண்டாம் இதயம்
நான் ஆகிறேன்
உனக்குள்ளே இன்னோர் உசுராய்
நான் ஆகிறேன்

ஒன்னத் தாங்கவே, நானும் வாழுறேன்
சாஞ்சனே தோல் சாஞ்சனே
ஒன்ன காணவே, கண்ண வாங்குனேன்
பூத்திறு நீ பூத்திறு



Credits
Writer(s): M C Murali Raj, Kalaikumar, Sabesh Mangadu
Lyrics powered by www.musixmatch.com

Link