Aalamar Vearu Enga

ஆ: ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு காலமுள்ள காலம் இங்கு நிலைச்சிருக்கும் பாரு.
(ஆலமர)
வீரத்திலும் சூரத்திலும் ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத்தான் கட்டுபடும் எங்க ஊரு வாழ வேண்டும் எங்க அண்ணண் ஆண்டு நூரு
ஆசி வழங்க வேண்டும் கோயில் கொண்ட ஐயனாரு.
(ஆலமர)
ஆ: நஞ்சைக்கும் புஞ்சைக்கும் பஞ்சங்கள் இல்லாத பாண்டிய சீமையிலே அட நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் வந்து பாயிர புண்ணிய பூமியிலே.
(நஞ்சை)
பெ: பொண்டுகள் எல்லாம் கொலவ சொல்லி பாடுங்கடி சுங்கிடி சேலை பரிஞ்சு கட்டி ஆடுங்கடி.
ஆ: பல்லாண்டு பூமியின் மேலே இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே.
(ஆலமர)
ஆ: கட்டிளங் காளையர் கை கொண்டு நையாண்டி மேளத்த கொட்டிடனும் இன்னும் கல்யானம் ஆகாத கன்னியர்
வந்திங்க கும்மிகள் கொட்டிடனும்.
(கட்டிளங்)
பெ: இப்பவும் இங்க இவனிருக்க காவலிலே என்னடி அம்மா நமக்கு மனக்கவலை.
ஆ: பல்லாண்டு பூமியின் மேலே இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே.

ஆ: ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு காலமுள்ள காலம் இங்கு நிலைச்சிருக்கும் பாரு.
(ஆலமர)
வீரத்திலும் சூரத்திலும் ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத்தான் கட்டுபடும் எங்க ஊரு வாழ வேண்டும் எங்க அண்ணண் ஆண்டு நூரு
ஆசி வழங்க வேண்டும் கோயில் கொண்ட ஐயனாரு.

Credits
Writer(s): Ilaiyaraaja, Pulamaipithan
Lyrics powered by www.musixmatch.com

Link