Venpani Malare Male (The Romance Of Power Paandi)

வெண்பனி மலரே
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே

உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

வெண்பனி மலரே...
உன் இரு விழியால்...

தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிாிக்கின்றதே

வந்ததும் வாழ்ந்ததும்
கண் முன்னே தெரிகின்றதே
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே

பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே

வெண்பனி மலரே
உன் இரு விழியால்

வெண்பனி மலரே
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே

உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்



Credits
Writer(s): Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link