Thenpodhigai Katre

ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ

தென் பொதிகைக் காற்றே
தென் மதுரைப் பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே

அம்மா எனும் பாக்கியம்
அது சும்மா வந்து சேருமா?
பிள்ளை பெரும் புண்ணியம்
அது இல்லை எனில் இன்பமா?

கண்மணி கண்மணி மீது
இரு மின்மினி மின்மினி ஏது?

தென் பொதிகைக் காற்றே
தென் மதுரைப் பாட்டே

சிறு வாழைத் தண்டு ரெண்டு
சிணுங்கி வரும் கால்களில்
செவ்வந்தி மாலை ரெண்டு
சாய்ந்து வரும் தோள்களில்

தாய்மை என்பது
அது போல வரமும் ஏதடா?
உன்னை சுமப்பது
அது போல சுகமும் ஏதடா?

இளங்காற்றின் இன்பமே
இனி ஏது துன்பமே?

தென் பொதிகைக் காற்றே
தென் மதுரைப் பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே

அம்மா எனும் பாக்கியம்
அது சும்மா வந்து சேருமா?
பிள்ளை பெரும் புண்ணியம்
அது இல்லை எனில் இன்பமா?

கண்மணி கண்மணி மீது
இரு மின்மினி மின்மினி ஏது?

தென் பொதிகைக் காற்றே
தென் மதுரைப் பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே



Credits
Writer(s): Ilayaraja, Kamakodiyan
Lyrics powered by www.musixmatch.com

Link