Edhai Ninaithom - From "Kaakka Muttai"

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்
எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மையை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே
ஆசையைத் தான் வென்றவன் இல்லையே
அதை இன்று தான் உணர்ந்ததென் பிள்ளையே

புதுப் புது ஏக்கம் அளித்திடும்
தினம் தினம் தூக்கம் கெடுத்திடும்
மனதினை திறந்து வைக்கையில்
இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மையை நாம் உணர்ந்தோம்

ஆசையில் ஏறி மேகத்தில் போனோம்
குயில் முட்டை மேலே காக்கைகள் ஆனோம்
புல் நுனி மீதே தூங்கிடும் பனியை ரசித்தால்
மின்னலின் ஒளியின் மீது கொண்ட
மயக்கம் விலகிடுமே

கிடைத்ததை எண்ணி
வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால்
ஜன்னலின் கதவைத் தீண்டி
புதிய வெளிச்சம் வீசிடுமே

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மையை நாம் உணர்ந்தோம்
ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே
ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே

ஒஒஒஒஓஓ ஒஒஒஒஓஓ
னனனனனானனனா னனனனனானனனா



Credits
Writer(s): G V Prakash Kumar, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link