Ennai Thedi

என்னை தேடி தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே
நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி
உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடி
அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா பார்க்கவா
இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா

உயிரை உறிஞ்சும் குழலாய் ஓர பார்வை வீசி போனாய்
மறுபடி வருவாய் என்று நினைத்து காத்து கிடந்தேன் என்ன ஆனாய்

மயக்கத்தில் நான் இருந்தேன்
மனம் எனும் தாள் திறந்தேன்
உன்னை தீண்டும் போது தீயில் வேகிறேன்
இந்த காதல் நோயில் நானும் சாகிறேன்

என்னை தேடி தேடி நாட்கள் போனதே
ஆஆ ஆஆஆ

கனவில் நொழைந்த உன்னை
கண்ணை மூடி பூட்டி கொள்வேன்
புழுக்கத்தில் நீயும் புரண்டு படுத்தால்
விசிறியாக மாறி கொள்வேன்

தலையணை வேண்டும் என்பேன்
மடியினில் சாய்ந்து கொள்வேன்
இதழ் முத்தம் என்ற மெத்தை போடவா
நீ தூங்கும் போது காவல் காக்கவா

என்னை தேடி தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே

நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி
உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடா
அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா பார்க்கவா
இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா



Credits
Writer(s): Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com

Link