Aagaaya Neelangalil

ஆகாய நீலங்களில்
கண்கள் வாங்கி வந்தாய் நீ
கடல் தந்த ஆழங்களில்
கண்டெடுத்த முத்தாய் நீ

ஆகாய நீலங்களில்
கண்கள் வாங்கி வந்தாய் நீ
கடல் தந்த ஆழங்களில்
கண்டெடுத்த முத்தாய் நீ

கார்வண்ணன் ஊதும் பூங்குழல் நீ
தாவூதலை சலாமின் கானமும் நீ
கபீரின் தேவராகம் நீ
இசை என்றாலே நீதான் கண்ணே

நீதான் என் தேம்பாவணி
இன்று நாளை நேற்றும் நீ
கண்ணில் இன்னும் காணாமலே
உள்ளம் கொய்த கள்வன் நீ

அழகே ஆருயிரே
கருவின் காரிருளே
முன்பே கண்டாயே
இனி நீதான் ஒளி தீபமே

யார் போலும் நீயில்லையே
இசை ஒன்றே என் சாயலே
எதைப்பார்த்தும் அஞ்சாதிரு
எதைக்கேட்டும் கெஞ்சாதிரு

ஆகாய நீலங்களில்
கண்கள் வாங்கி வந்தாய் நீ
கடல் தந்த ஆழங்களில்
கண்டெடுத்த முத்தாய் நீ

ஆகாய நீலங்களில்
கண்கள் வாங்கி வந்தாய் நீ
கடல் தந்த ஆழங்களில்
கண்டெடுத்த முத்தாய் நீ



Credits
Writer(s): Subramanian Thamarai, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link