Adhirum Veeradhi Veeran

அதிரும் வீராதி வீரன் வந்தானே
குதுர தோல் மேல ஏறி வந்தான்
அரும சீரெல்லாம் ஏந்தி நின்னானே
பெருமை சேர்த்து தான் வாங்கி தந்தான்

அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்

ஊரு வெளஞ்சிடனும்
நாடு செழிச்சுடனும்
பேரும் பெருகிடனும் ஆறா
நாளும் மன உறுதி
தானா தர வேணும்
அறமாக வரமாக நலமும் வளமும் தரனும் தரனும்

அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்

முறுக்கு மீசை அத சுருட்டி தான் தூக்கி
உன்னை வெரிச்சுதான் பாக்கணுமே வெடல காலை
அடக்கி வெச்ச பல ஆசைய சேர்த்து
அது கேட்டு தான் வரட்டும் ஆழ

வயசு புள்ள வாய் பேச்சே இல்லாம
ஒரு கண்ணால கண்ஜாட காட்டி பேசும்
வழிய காட்டி முட்டாயதான் கேட்டு
சிறு வாண்டெல்லாம் வந்து நிக்கும்

நெஞ்சோடு நம்பிக்கை நீ ஊட்டனும்
பஞ்சத்த நீ போக்கணும்
மண்ணெல்லாம் பொன்னாக நீ ஆக்கணும்
மக்கள தான் காக்கணும்

உண்மைக்கு பேர் சொல்லும் ஊராகணும்
ஒன்னாக தான் வாழனும்
ஒன்னாக எல்லாமே உண்டாகணும்
ஊருக்கு நல்வாக்கு நீ கூறனும்

ஊரு வெளஞ்சிடனும்
நாடு செழிச்சுடனும்
பேரும் பெருகிடனும் ஆறா
நாளும் மன உறுதி
தானா தர வேணும்
அறமாக வரமாக நலமும் வளமும் தரனும் தரனும்

அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்

அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்



Credits
Writer(s): Ajesh Ajesh, Muthamil Muthamil
Lyrics powered by www.musixmatch.com

Link