Unnale Unarndhene

Oh, இதயங்கள் தரவா
Oh, உடையாமல் தொடவா
Oh, துயரங்கள் மறப்போம்
உயரத்தில் பறப்போம் கொஞ்சம் மெதுவா

Oh, மனமெங்கும் சிறகா
Oh, மெதுவாக திற வா
Oh, ஏது ஒட்டி பிறந்தோம்
எதை விட்டு கடந்தோம் நெஞ்சை தொட வா

கை மீறும் மனதை கை தூக்கி விடவா
காணாத நொடியை கடந்து கடந்து வரவா
கண் மீறும் துளியை கொஞ்சம் துடைத்திட வா
கண்ணீரும் இனித்தால் உலகம் அதை விடுமா

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே
உலகை மறந்தே புது எல்லை கடப்போம்

வான் கண்ணீர் துளி ஜன்னல் பனி நீலாதடா
அதை துறந்து காயம் தன்னை காற்றில் கரைந்திடும் காலம் அல்லவா
நீர் தாழாமலே தாயின் மடி சேராதடா
தரை விழுந்த போதும் என்னை தாங்கி பிடித்திடும் நண்பனாக வா

நம் கருவிழி கலங்குவதை
கண் விரலுக்கு சொல்வதில்லை
உன் அருகினில் நடக்கையில் வழிகளும் பிடிக்குது
இதைவிட எதுவுமில்லை

எத்தனை முறை அழுதிருப்போம்
அத்தனை முறை அதை மறந்தோம்
அக்கறை என்றும் உச்சம் இல்லை
இருப்பதும் துச்சம் இல்லை
நிமிடங்கள் ரசித்திருப்போம்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே
இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே
உலகை மறந்தே புது எல்லை கடப்போம்



Credits
Writer(s): Karthik Ku, Ajesh Ajesh
Lyrics powered by www.musixmatch.com

Link