Kavi Solla

போதும் உந்தன் நயனம் எந்தன் ஊஞ்சலாகும்
நீங்கி போகும் துயரங்கள் எல்லாமே
போதும் இந்த பிறவி பயணம் தீர்ந்து போகும்
நீயும் கொஞ்சம் புன்முறுவல் தந்தாலே

நினைவோடு பேச மனம் பழகியதே
அனலோடு நீங்கி உயிர் நனைகிறதே
ஏகாந்தம் என்னை தினம் சுடுகிறதே
Oh-oh-oh, ஒரு வார்த்தை பேசிவிடு அலைகிறதே

கவி சொல்ல சொன்னால்
நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
கடல் கொண்டு போனால்
கரை நானும் சேர்வேன்
உன் காதல் வெள்ளம் நீந்த தீராதடி

இடைவெளி தான் நீளாமல் தீராதா...
இரு மனங்கள் சேராமல் போகாதா...

கவி சொல்ல சொன்னால்
நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
கடல் கொண்டு போனால்
கரை நானும் சேர்வேன்
உன் காதல் வெள்ளம் நீந்த தீராதடி

மழை தீண்டி போனால்
நிலம் பேசும் பெண்ணே
எதை செய்வதோ உன்னுடன் பேச
குழல் தாண்டி போனால்
இசை ஆகும் காற்றே
எனை தாண்டி நீ போக நான் ஏங்கினேன்



Credits
Writer(s): Karthik Ku, Ajesh Ajesh
Lyrics powered by www.musixmatch.com

Link