Aasai Peraasai

அம்பு உயிரை பறிக்க
துடிக்குது பார்
கண்கள் சூழ்ச்சி மறைத்து
நடிக்குது பார்
ஆசை தூண்டில் போட்டு
இழுக்குது பார்
பேராசை வலையை விரித்து
வீழ்த்துது பார்

மதியது மங்கி மங்கி
போகுது பார்
வன்மம் ததும்பி ததும்பி
ஆடுது பார்
இரவு சிவக்க சிவக்க
நகருது பார்
எமனின் பாசக்கயிறு
பறக்குது பார்

பேராசை நூலில் ஆடும் பொம்மையாட்டம்
விதியோடு போட்டி போட்டு ஓடும் ஓட்டம்
நெஞ்சுக்குள் நஞ்சை ஊற்றும் இந்த கூட்டம்
என்னாகும் ஏது ஆகும் இந்த நாடகம்

கொன்றால் பாவம்
தின்றால் போகும்
தின்ற பாவம் என்ன ஆகும்?
தின்ற பாவம் என்ன ஆகும்?



Credits
Writer(s): Dayal Padmanabhan, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link