Vinaipayan

வினைப்பயன் வீரியம் கொண்டால்
எய்த அம்பு எய்தவனையே துளைக்கும்!
எறிந்த கல் எறிந்தவனையே தாக்கும்!

புல் விளைத்து நெல் அறுக்க நினைத்தாயே!
விதியாட்டத்தை உணர மறுக்கும் மானிடா!

சதியாட்ட சுழலில் சிக்கி கதறும் மானிடா!
மானிடா!
மட மானிடா!
மட மானிடா!

தீரா தீர ரரர தீதீ தீரா
தீரா தீர ரரர தீதீ தீரா

வாழ்க்கை என்னும் புனித வேதம்!
நித்தம் ஓதும் அது
இனிய பாடம்!

பணியாமல் போனாய்
அது பாதம்
அநியாயத்தின் துணையால்
செய்தாய் பாவம்!

விதியாட்டத்தை
உணர மறுக்கும் மானிடா!

சதியாட்ட சுழலில் சிக்கி கதறும்
மானிடா! மானிடா!
மட மானிடா!
மானிடா!
மட மானிடா!

உள்மனதை வேட்கை ஆட்கொண்டால்
கயல் அழியும்-வாயாலே!
யானை அழியும்-மெய்யாலே!
விட்டில் அழியும்-கண்ணாலே!
வண்டு அழியும்-நாசியாலே!
அசுணமா அழியும்-செவியாலே!
செவியாலே!

உள்மனதை குறுக்குவழி ஆட்கொண்டால்
மலம் கேட்கும்-புசிக்கவே!
வனம் கேட்கும்-எரிக்கவே!
குளம் கேட்கும்-மூழ்கவே!
நிலம் கேட்கும்-புதையவே!
வரம் கேட்கும்-அழியவே!
அழியவே!

தீது செய்தாயடா மானிடா!
தீக்கிரையாகி போனாயே மானிடா!
தீது செய்தாயடா மானிடா!
தீக்கிரையாகி போனாயே மானிடா!

மட மானிடா! மட மானிடா!
மானிடா! மட மானிடா!

தீக்கிரையாகி போனாயே
தீக்கிரையாகி போனாயே

மட மானிடா! மட மானிடா!
மட மானிடா! மட மானிடா!
மட மானிடா! மட மானிடா!
மட மானிடா!



Credits
Writer(s): Dayal Padmanabhan, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link