Kannaadi Kannaadi

ஆஆஆஆ-ஆஆஆஆ-ஆஆஆஆ

கண்ணாடி கண்ணாடி பாவாய்
ஆனேன் உன் ஆண் தாயாய்
விரலோடு கதை பேசும் பூவாய்
நான் ஆனேன் உந்தன் காற்றாய்

வானமே இன்று எந்தன் மேல
வீழந்தததே ஓர் தூறல் போலே
தீரா ஓர் இன்பமாய்

உந்தன் பாதம் தேயாமலே
நானே காலாகிறேன்
உன் சின்ன இதயம் பயம் கொள்ளும் பொழுது
நானே உன் துயிலாகிறேன்

உந்தன் கண்ணோடு நீ காணும் கனவாகிறேன்
ஏமாற்றம் அது கூட நான் ஆகிறேன்
நீ சிந்தா கண்ணீராய் காணா பரிசாய் ஆவேன்
நீ கொள்ளா இன்பம் ஆவேன்

என்றும் உன்னை நீங்கேனடி
மூச்சே நீதானடி
என் காதின் ஓரம் உன் சுவாசப் பாடல்
என்றென்றும் கேட்பேனடி

என்னை என்றேனும் ஓர் நாள் நீ மறந்தாலுமே
வானேறி வேறெங்கும் பறந்தாலுமே
நான் மறவேன் என் உயிரே
நீயே எந்தன் பேச்சாய்
ஏய் நீயே எந்தன் மூச்சாய்

கண்ணாடி கண்ணாடி பாவாய்
ஆனேன் உன் ஆண் தாயாய்
விரலோடு கதை பேசும் பூவாய்
நான் ஆனேன் உந்தன் காற்றாய்

வானமே இன்று எந்தன் மேல
வீழந்தததே ஓர் தூரல் போலே
தீரா ஓர் இன்பமாய்



Credits
Writer(s): Hesham Abdul Wahab
Lyrics powered by www.musixmatch.com

Link